டெல்லியை கவலைக்குள்ளாக்கும் காற்று மாசு…!!

26 October 2020, 8:53 am
Air Pollution Levels In North India At "20-Year Low" Amid Lockdown: NASA
Quick Share

டெல்லி: காற்று மாசுவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தின்போது காற்றின் தரம் மிகவும் பாதிக்கப்படும். இந்த ஆண்டு குளிர்காலத்தின் தொடக்கத்திலேயே காற்று மிகவும் மாசுபட்டு உள்ளது.

கடந்த சில நாட்களாகவே தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மோசமாக இருந்து வருகிறது. காற்று மாசுவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் அதிகரிக்கும் காற்று மாசுபாடு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

delhi airpollution - updatenews360

டெல்லியின் ஆனந்த்விஹார் பகுதியில் காற்றின் தரக்குறியீடு 405 ஆக இருந்தது. இது மிகவும் மோசமான நிலை, காற்றின் தரக்குறியீடு 50 வரை இருந்தால் மட்டுமே அது நல்ல நிலை ஆகும்.

டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் காற்றின் தரம் மோசமாகவே இருந்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Views: - 16

0

0