பிரபல இந்து சாமியாரைக் கொல்ல சதி செய்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு..! வெற்றிகரமாக முறியடித்த டெல்லி போலீஸ்..!

17 May 2021, 2:23 pm
narsingh_saraswati_updatenews360
Quick Share

காசியாபாத்தின் தஸ்னா தேவி மந்திரைச் சேர்ந்த இந்து சாமியார் மகந்த் யதி நரசிங்கநாத் சரஸ்வதியை படுகொலை செய்வதற்கான முயற்சியை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு முறியடித்ததாகக் கூறப்படுகிறது. 

சரஸ்வதியைக் கொல்ல சதி செய்த காஷ்மீரில் இருந்து வந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அவர் முகமது தார் அல்லது ஜஹாங்கர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழு ஜெய்ஷ்-இ-முகமது தான் இந்து சாமியாரைக் கொலை செய்வதற்கான சதித்திட்டத்தின் பின்னணியில் இருப்பதாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ஜஹாங்கர் தனது அடையாளத்தை மாற்றிய பின்னர் சரஸ்வதியை கொள்ள திட்டமிட்டுள்ளதாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அவர் வசம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஜஹாங்கர் தச்சு வேலை செய்யும் ஒரு தொழிலாளி என்றும், அவர் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்தார். ஜஹாங்கர் பயங்கரவாத அமைப்புடன் வாட்ஸ்அப் வழியாக தொடர்பு கொண்டிருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

அவரைத் தூண்டுவதற்காக சரஸ்வதியின் வீடியோவை ஜஹாங்கரிடம் பயங்கரவாத அமைப்பு காட்டியதாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து ஜஹாங்கருக்கு ஆயுதப் பயிற்சியையும் ஜெய்ஷ்-இ-முகமது அளித்துள்ளது.

ஜஹாங்கர் ஏப்ரல் 23 அன்று டெல்லிக்கு புறப்பட்டார். உமர் என அடையாளம் காணப்பட்ட ஒருவர் மூலம் அவர் டெல்லியில் தங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. இருவரும் டெலிகிராம் வழியாக தொடர்பு கொண்டிருந்தனர். ஜஹாங்கரின் வங்கிக் கணக்கில் ரூ 35,000 டெபாசிட் செய்யப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Views: - 155

0

0