காலநிலை ஆர்வலர் கிரெட்டா டன்பெர்கிற்கு எதிராக வழக்கு..! டெல்லி போலீசார் அதிரடி..!

4 February 2021, 5:56 pm
Greta_Dunberg_UpdateNews360
Quick Share

இந்தியாவில் விவசாயிகள் போராட்டங்களுக்கு ஆதரவாக ட்வீட் செய்த சுற்றுச் சூழல் ஆர்வலர் கிரெட்டா டன்பெர்க் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் விவசாயிகள் இயக்கம் குறித்து டன்பெர்க் ஆத்திரமூட்டும் ட்வீட் செய்ததாகக் கூறி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆரம்ப தகவல்களின்படி, ஐ.டி சட்டத்தின் 120 பி, 153 ஏ இன் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி காவல்துறை விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இளம் காலநிலை ஆர்வலர் கிரெட்டா டன்பெர்க் மற்றும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் மருமகள் மீனா ஹாரிஸ் ஆகியோர் மற்றும் சர்வதேச சமூகத்தைச் சேர்ந்த பலர், மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து கூறி வருகின்றனர்.

முதலில் சர்வதேச பாப் இசைப் பாடகியான ரிஹானா பல பகுதிகளில் இணைய சேவைகளை ரத்து செய்வதன் மூலம் விவசாயிகள் மீதான மத்திய அரசின் ஒடுக்குமுறையை எடுத்துரைக்கும் செய்தி கட்டுரையை பகிர்ந்து அவரின் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து “இந்தியாவில் விவசாயிகள் போராட்டத்துடன் நாங்கள் ஒற்றுமையுடன் நிற்கிறோம்” என்று டன்பெர்க் ட்வீட் செய்தார். அந்த டிவீட்டில், “நீங்கள் உதவ விரும்பினால் இங்கே ஒரு டூல் கிட் உள்ளது” என்ற குறிப்புடன் எதிர்ப்பை ஆதரிக்கும் வழிகள் குறித்த விவரங்களைக் கொண்ட ஆவணத்தையும் பகிர்ந்தார்.

அந்த ஆவணத்தில் இது ஜனவரி 26 வன்முறைக்கு சில தினங்களுக்கு முன்னதாகவே சர்வதேச அளவில் திட்டமிடப்பட்ட சதி என்பதை வெளிப்படுத்தும் வகையில் தகவல்கள் இருந்ததால், விவசாயிகள் வன்முறை குறித்த சர்வதேச சதி அம்பலமானது.
இதையடுத்து சுதாரித்த கிரெட்டா டன்பெர்க் அந்த டிவீட்டையே டெலீட் செய்தார்.

இந்நிலையில் தற்போது, கிரெட்டா டன்பெர்க்கின் கருத்துக்காக அவருக்கு எதிராக டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

Views: - 50

0

0

1 thought on “காலநிலை ஆர்வலர் கிரெட்டா டன்பெர்கிற்கு எதிராக வழக்கு..! டெல்லி போலீசார் அதிரடி..!

Comments are closed.