பல மணி நேரம் தாமதமான ரயில்கள்..! மறியல் போராட்டம் நடத்தி முடக்கிய டானா பகத்துகள்..! எதற்காக போராட்டம்..?

3 September 2020, 5:48 pm
Tana_Bhagats_Protest_UpdateNews360
Quick Share

டெல்லி-ராஞ்சி ராஜதானி எக்ஸ்பிரஸ் மற்றும் பல சரக்கு ரயில்கள் இன்று 7 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டங்களின் காரணமாக சிக்கித் தவித்தன. சுமார் 250’க்கும் மேற்பட்ட டானா பகத்துகள் ஜார்க்கண்டின் லதேஹர் மாவட்டத்தில் டோரி சந்திப்பில் முற்றுகையை ஏற்படுத்தினர். 

போராட்டக்காரர்கள் நில உரிமைகள் மற்றும் சோட்டானக்பூர் குத்தகை சட்டத்தை திருத்த வேண்டும் என்று கோரி மறியலில் ஈடுபட்டனர். புது டெல்லி-ராஞ்சி ராஜதானி எக்ஸ்பிரஸ் டால்ட்கஞ்ச் ரயில் நிலையத்தில் அதிகாலை 5.30 மணியளவில் நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் கிழக்கு மத்திய ரயில்வேயின் (ஈ.சி.ஆர்) பர்ககனா-பார்வாடி ரயில் பாதையில் கிட்டத்தட்ட 70 சரக்கு ரயில்கள் சிக்கித் தவித்தன.

டெல்டி-ராஞ்சி மற்றும் டால்ட்கஞ்சிற்கு அப்பால் உள்ள டெல்லி-ஹவுரா ரயில் பாதைகளில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதனால் கிளர்ச்சி காரணமாக மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி வழங்கல் தடைபட்டுள்ளது என்று ஈ.சி.ஆர் பர்ககானா பிரதேச போக்குவரத்து மேலாளர் மணீஷ் சவுரப் தெரிவித்தார்.

டெல்லி-ராஞ்சி மற்றும் டால்ட்கஞ்சிற்கு அப்பால் உள்ள டெல்லி-ஹவுரா இரயில் பாதைகளின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது, மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி வழங்கல் பாதிப்புக்கு வழிவகுத்தது.

ஜார்கண்டின் கும்லா மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மற்றும் மகாத்மா காந்தியைப் பின்பற்றுபவர்களாக இருக்கும் 250’க்கும் மேற்பட்ட டானா பகத்துகள், வெள்ளை தோத்தி மற்றும் காம்ச்சா உடையணிந்து, ரயில் தடங்களில் குதித்து, நில உரிமைகள் மற்றும் சோட்டானக்பூர் குத்தகை சட்டத்தை திருத்த வேண்டும் என்று கோரினர்.

லதேஹர் மாவட்ட ஆணையர் ஜிஷன் கமர், கிளர்ச்சியில் ஈடுபட்ட டானா பகத்துகளுடன் பேசவும் பிரச்சினையை தீர்க்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் சுகதேவ் சிங் கூறினார். “டோரி சந்திப்பின் ஸ்டேஷன் மாஸ்டர் அகில பாரதிய ராஷ்டிரிய ஸ்வதந்திரதா சேனையிடமிருந்து ஒரு கடிதம் வந்ததை அடுத்து, செப்டம்பர் 2 முதல் பொருளாதார முற்றுகையைத் தொடங்குவதாக அச்சுறுத்தியதை அடுத்து நாங்கள் போராட்டம் குறித்து மாநில அதிகாரிகளுக்கு அறிவித்தோம்.” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ராஞ்சி செல்லும் ராஜதானி எக்ஸ்பிரஸின் சுமார் 750 பயணிகளுக்கு ரயில்வே அதிகாரிகள் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் அவர்களை டான்ல்டொங்கஞ்சில் இருந்து சாலை வழியாக தங்கள் இடங்களுக்கு அனுப்ப முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 0

0

0