டெல்லி சிஏஏ கலவரம் : ஷர்ஜீல் இமாமை கைது செய்தது டெல்லி காவல்துறை..!

26 August 2020, 10:25 am
sharjeel_updatenews360
Quick Share

கடந்த பிப்ரவரியில் சிஏஏ குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து, வடகிழக்கு டெல்லியில் நடத்தப்பட்ட கலவரம் தொடர்பாக டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு ஜவாஹர்லால் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ஷர்ஜீல் இமாமை கைது செய்துள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ஞாயிற்றுக்கிழமை, அவர் அசாமில் இருந்து மீண்டும் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார்.

முன்னதாக ஜூலை 21 அன்று, டெல்லி காவல்துறையினர் அவரை டெல்லிக்கு அழைத்து வர திட்டமிட்டிருந்தனர். ஆனால் அவர் டெல்லிக்கு புறப்படுவதற்கு சற்று முன்னதாக, இமாமுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவரை அசாமிலேயே வைத்திருந்தனர்.

சிஏஏ மற்றும் என்ஆர்சிக்கு எதிரான போராட்டங்களின் போது அவர் பேசிய சர்ச்சைக்குரிய வசனங்கள் தொடர்பான வழக்கில் இமாம் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். தற்போது அசாம் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட யுஏபிஏ தொடர்பான வழக்கில் குவஹாத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக பல இடங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நடந்த போராட்டங்களின் போது இமாமுடைய எரிச்சலூட்டும் உரைகள் தொடர்பாக, டெல்லி காவல்துறை ஜூலை 25 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 0 View

0

0