11 லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள்..! டெல்லி வன்முறை தொடர்பாக உமர் காலித்திடம் விசாரணை..!

15 September 2020, 2:01 pm
Khalid_Delhi_Riot_UpdateNews360
Quick Share

கடந்த பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த வகுப்புவாத வன்முறை தொடர்பான வழக்கில், 11 லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களுடன் போலீசார் அவரை விசாரிக்க விரும்புவதாக சிறப்பு பொது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்ததால், முன்னாள் ஜே.என்.யூ மாணவர் தலைவர் உமர் காலித் 10 நாட்கள் போலீஸ் காவலில் அனுப்பப்பட்டுள்ளார்.

வடகிழக்கில் டெல்லியில் நடந்த வன்முறையில் பங்கு வகித்ததற்காக சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் ஞாயிற்றுக்கிழமை இரவு காலித் கைது செய்யப்பட்டார். 11 மணி நேர விசாரணைக்கு பின்னர் அவரை டெல்லி போலீசாரின் சிறப்புப் பிரிவு கைது செய்தது.

இதையடுத்து அவர் வீடியோ கான்பெரன்ஸ் மூலம் கூடுதல் அமர்வு நீதிபதி அமிதாப் ராவத் முன் ஆஜர்படுத்தப்பட்டார் மற்றும் செப்டம்பர் 24 வரை காவலில் வைக்கப்பட்டார். முன்னாள் ஜே.என்.யூ மாணவரான உமர் காலித்தை, தனது காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்தது.

“சிஏஏ, என்பிஆர் மற்றும் என்ஆர்சியை எதிர்த்து நடந்த போராட்டத்தில் சதி மற்றும் வன்முறை ஈடுபாடு குறித்து குற்றம் சாட்டப்பட்ட உமர் காலித்தின் வழக்கின் தன்மை மற்றும் பங்கைக் கருத்தில் கொண்டு கலவரத்தின் விளைவாக பல தீவிர குழுக்கள் மற்றும் அமைப்புகளின் ஆதரவோடு, விசாரணையின் போது வந்த மிகப்பெரிய தொழில்நுட்ப தரவுகள் குறித்து காவலில் எடுத்து விசாரிக்க கோரப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். குற்றம் சாட்டப்பட்டவர்களை 10 நாட்களுக்கு காவலில் வைக்க தற்போதைய விண்ணப்பத்தை அனுமதிக்கிறேன்” என நீதிபதி தனது உத்தரவில் கூறினார்.

பிப்ரவரி 23-26 தேதிகளில் கலவரம் நடந்தபோது அவர் டெல்லியில் இல்லை என்று கூறி ரிமாண்ட் விண்ணப்பத்தை குற்றம் சாட்டப்பட்டவருக்கான வழக்கறிஞர் எதிர்த்தார். ஆனால் அரசு அதை தள்ளுபடி செய்து அரசு தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.