மருத்துவமனை வளாகத்தில் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்..! பாதுகாப்புக் காவலர்கள் வெறிச்செயல்..!

4 November 2020, 10:27 am
Rape_UpdateNews360
Quick Share

டெல்லியின் ரோகிணி மாவட்டத்தில் மருத்துவமனையின் வாகன நிறுத்துமிடத்தில் ஒரு பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக மருத்துவமனையின் பாதுகாப்புக் காவலர் உட்பட மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமையன்று, பாதுகாப்புக் காவலர் நோயாளியின் உதவியாளர்களை காத்திருப்பு அறையில் சோதனை செய்தபோது, ​​ஒரு நோயாளி பெண் தன்னுடன் உறவினர் யாரும் வரவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

கன்வார்பால் எனும் அந்த காவலர் இதை சாதகமாகப் பயன்படுத்தி, பரிசோதிக்க வேண்டும் என போலிக்காரணம் கூறி பெண்ணை மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வாகன நிறுத்துமிடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது பாதுகாப்புக் காவலருடன் மருத்துவமனையின் முன்னாள் பவுன்சர்கள் பிரவீன் மற்றும் மனீஷ் ஆகியோரும் சேர்ந்து கொண்டு பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது நண்பர் ஒருவரின் உதவியுடன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

“அந்த பெண் தனது நண்பர் ஒருவருடன் காவல் நிலையத்தை அடைந்து அவரது சோதனையை விவரித்தார். உடனடியாக, ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கைது செய்யப்பட்டனர்” என்று ரோகிணி காவல்துறை இணை கண்காணிப்பாளர் பி.கே.மிஸ்ரா கூறினார்.

இந்த சம்பவம் வெளியானதை அடுத்து பாதுகாப்புக் காவலர் மருத்துவமனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே மருத்துவமனை வளாகத்திற்குள் இதுபோன்ற வேறு ஏதேனும் சம்பவத்தில் மூவரும் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்று போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 31

0

0

1 thought on “மருத்துவமனை வளாகத்தில் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்..! பாதுகாப்புக் காவலர்கள் வெறிச்செயல்..!

Comments are closed.