புதுச்சேரி முதலமைச்சர் உட்பட 6 அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு: பாஜக அமைச்சர் நமசிவாயத்துக்கு உள்துறை ஒதுக்கீடு!

11 July 2021, 6:14 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட 6 அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவித்து 2 மாதங்கள் முடிந்து விட்டது. முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்று 50 நாட்களுக்குப் பின்னரே அமைச்சர்கள் யார் என்பதே முடிவு செய்யப்பட்டது. அமைச்சர்கள் பதவியேற்று சில வாரங்களாகிவிட்ட நிலையில் இன்றுதான் இலாகா ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ரங்கசாமிக்கு பொதுநிர்வாகம், உள்ளாட்சி உள்ளிட்ட 13 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜகவின் அமைச்சர் நமச்சிவாயத்துக்கு உள்துறை, மின்வாரியம் உள்ளிட்ட 6 துறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

என்.ஆர். காங்கிரஸின் லட்சுமி நாராயணனுக்கு பொதுப்பணித் துறை உட்பட 6 துறைகள், ஜெயக்குமாருக்கு வேளாண்துறை, சட்டம் உட்பட 6 துறைகள், சந்திர பிரியங்காவுக்கு போக்குவரத்து, ஆதி திராவிடர் நலத்துறை உட்பட 6 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பாஜகவின் மற்றொரு அமைச்சர் சரவணகுமாருக்கு பொது விநியோகம், சிறுபான்மையினர் விவகாரங்கள் உள்ளிட்ட 6 இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Views: - 324

0

0