திருப்பதி ஏழுமலையான் கோவிலின் சொத்து விவரங்கள்: வெள்ளை அறிக்கையாக வெளியீடு…!!

29 November 2020, 12:19 pm
Tirupathi temple updatenews360
Quick Share

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் சொத்து குறித்த விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் சொத்து குறித்த விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, திருப்பதி ஏழுமலையானுக்கு நவம்பர் 28ம் தேதி வரை நிகர சொத்து 7 ஆயிரத்து 754 ஏக்கர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,793 ஏக்கர் விவசாய நிலங்கள், விவசாயமில்லாத நிலங்கள் 5, 964 ஏக்கரும் இருப்பதாகவும் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1974ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை பக்தர்கள் தந்த சொத்தில் 335 ஏக்கர் விற்கப்பட்டு 6 கோடியே 13 லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளதாகவும் அந்த வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 22

0

0