நவம்பர் 16ம் தேதி முதல் சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி : கொரோனா சான்றிதழ் அவசியம்!

30 October 2020, 12:18 pm
Sabaraimalai - Updatenews360
Quick Share

கேரளா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என கேரள அரச தெரிவித்துள்ளது.

சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்படுகிறது. 2 மாதங்கள் வரை கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும், அதே போல வழக்கமாக இந்த காலக்கட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்செய்வர்.

இந்த நிலையில் கொரோனா பொது முடக்கம் காரணமாக இந்த ஆண்டு தினமும் ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என கேரள அரசு தெரிவித்துள்ளது.

விடுமுறை தினங்கள் மற்றும் மகர விளக்கும் நாளில் கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அதே போல கொரோனா இல்லை என்று சான்றிதழ் கொண்டு வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Views: - 19

0

0