கனமழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கும் தர்மசாலா : காட்டாற்றில் அடித்து செல்லப்பட்ட கார்கள்!! (வீடியோ)

12 July 2021, 6:32 pm
Dharmashala- Updatenews360
Quick Share

இமாச்சல்பிரதேசம் : மேகவெடிப்பு காரணமாக பலத்த மழை பெய்ததால் தர்மசாலாவில் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டதால் பலத்த சேதமடைந்துள்ளது.

இமாச்சலில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. தற்போது மேகவெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளத்தில் பல கார்கள் அடித்துச் செல்லப்பட்டதுடன், பல கட்டிடங்கள் மற்றும் ஹோட்டல்கள் சேதமடைந்தன.

கனமழைய பெய்து வருவதால் மஞ்சி நதி நிரம்பியுள்ளது. இதனால் 10க்கும் மேற்பட்ட கடைகளும் சேதமடைந்தன. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சிம்லா மாவட்டத்தின் ராம்பூர் பகுதியில் ஜாக்ரி தேசிய நெடுஞ்சாலை தடை செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சமவெளி மற்றும் நடு மலைகளில் கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு வானிலை எச்சரிக்கையும், ஜூலை 14 மற்றும் 15 ஆம் தேதிகளுக்கு மஞ்சள் வானிலை எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

Views: - 159

0

0