நந்திகிராமில் மம்தாவுக்கு மிகப்பெரும் தோல்வி உறுதி..! இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் அமித் ஷா சூளுரை..!

Author: Sekar
30 March 2021, 2:43 pm
amit_shah_updatenews360
Quick Share

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடுமையான போட்டி நிலவும் நந்திகிராமில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் இருவரும் நடத்திய மெகா பேரணிகளை நடத்தினர். 
சோனா சூரா பகுதியில் மம்தா பானர்ஜி தனது கட்சியின் வலிமையைக் காட்டிய நிலையில், ​​பாஜகவின் பேரணியில் மம்தாவின் போட்டியாளர் சுவேந்து அதிகாரி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

“தேர்தலின் போது உங்கள் வாக்குகளை அமைதியாகப் போடுங்கள். கூல் கூல் திரிணாமுல் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் மனதை 48 மணி நேரம் குளிர்ச்சியாக வைத்திருங்கள்.” என்று மம்தா பானர்ஜி கூட்டத்தில் உரையாற்றினார்.

மறுபுறம், நந்திகிராமில் தனது கட்சியின் வேட்பாளர் மம்தாவை வீழ்த்தி பெரும் வெற்றி பெறுவார் என அமித் ஷா கூறினார்.

“நந்திகிராமில் சுவேந்து அதிகாரி மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். மம்தா பானர்ஜி தோல்வியை எதிர்கொள்வார்.” என்று அமித் ஷா தெரிவித்தார்.

சாலை பேரணிக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, மக்களின் பதில் நந்திகிராமில் யார் வெல்லப் போகிறது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது என்றார்.

“நந்திகிராம் மக்களிடையே உள்ள உற்சாகத்தைப் பார்க்கும்போது, ​​பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர் சுவேந்து அதிகாரி இங்கிருந்து வெல்லப் போகிறார் என்பது தெளிவாகிறது. உண்மையான மாற்றத்ததைக் கொண்டுவருவதற்கான எளிதான வழி நந்திகிராமில் இருந்து மம்தா தீதி தோற்பதை உறுதி செய்வதாகும்” என்று அவர் கூறினார்.

அமித் ஷாவின் பேரணியில் திரண்ட பெரும் கூட்டம்

பூக்கள் மற்றும் பாஜக கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு வாகனத்தின் ல் நின்று அமித் ஷா, சுவேந்து அதிகாரியுடன் இணைந்து கிழக்கு மிட்னாபூரில் பெத்துரியா மற்றும் ராயபாரா இடையே நான்கு கி.மீ. பேரணியை நடத்தினார்.

ஜெய் ஸ்ரீ ராம், நரேந்திர மோடி ஜிந்தாபாத் மற்றும் அமித் ஷா ஜிந்தாபாத் கோஷங்களுக்கிடையில் குறுகிய வீதிகளில் நுழைந்த ஊர்வலத்தை உள்ளூர்வாசிகள் சாலையின் இருபுறமும் வரிசையாக நின்று ஆதரவளித்தனர். அவர்களில் பலர் வீடியோக்களை படம்பிடிப்பதும், பேரணியில் செல்பி எடுத்துக்கொள்வதும் காணப்பட்டது.

நந்திகிராமில் வாக்குப்பதிவு ஏப்ரல் 1’ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 70

0

0