கார் மீது தாக்குதல்..! மேற்குவங்க பாஜக மாநிலத் தலைவருக்கு காயம்..! திரிணாமுல் கட்சியினர் தொடர் அட்டூழியம்..!

8 April 2021, 11:02 am
dilip_ghosh_attack_updatenews360
Quick Share

மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷின் வாகனம் உட்பட அவரது கான்வாய் கூச் பெஹாரில் இன்று தாக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிதால்குச்சி பகுதியில் நடந்த தேர்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு புறப்பட்டபோது தனது கார் மற்றும் பிற வாகனங்கள் மீது நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் செங்கற்கள் வீசப்பட்டதாக பாஜக தலைவர் திலீப் கோஷ் குற்றம் சாட்டினார்.

மேற்குவங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் தொடங்கும் முன்பே வன்முறைகள் அதிக அளவில் நடந்து வந்த நிலையில் தற்போது தேர்தல் பிரச்சாரத்தின் போது இது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பாஜக தலைவர்கள் மற்றும் அவர்களின் வாகனங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இன்று மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷின் காரும் திரிணாமுல் கட்சியினரால் தாக்கப்பட்டுள்ளது. பாஜகவின் வங்காள பிரிவு அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சேதமடைந்த வாகனங்களின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டது.

திரிணாமுல் காங்கிரஸ் கொடிகளை அசைத்த ஒரு சிலர் நாட்டு வெடிகுண்டுகள், செங்கற்கள் மற்றும் கற்களை எறிந்ததாக திலீப் கோஷ் கூறினார். இந்த தாக்குதலில் தனது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதாக திலீப் கோஷ் மேலும் கூறினார்.

இதற்கிடையே, எட்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்று வரும் மேற்கு வங்கத்தில் மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. மீதமுள்ள ஐந்து கட்ட வாக்குப்பதிவு முறையே ஏப்ரல் 10, 17, 22, 26, 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. வாக்கு எண்ணிக்கை மே 2’ஆம் தேதி நடைபெறும்.

Views: - 0

0

0

Leave a Reply