மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி ஊழியர்கள் அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு : மத்திய அரசு அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan9 January 2022, 5:16 pm
மத்திய அரசுப் பணியில் உள்ள மாற்றுத்திறனாளி, கர்ப்பிணி ஊழியர்கள் அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரிக்கும் நிலையில், மத்திய அரசு பணிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி ஊழியர்கள் அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 31-ஆம் தேதி வரை கர்ப்பிணி மற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்கள் பணிநேரத்தில் வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார்.
மேலும், அலுவல் கூட்டங்களை காணொலி மூலம் மட்டுமே நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் .துணை செயலாளர் நிலைக்கு கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் 50% பேர் சுழற்சி முறையில் மட்டுமே பணிக்கு வர அறிவுறுத்தியுள்ளார்.
0
0