பாகிஸ்தானின் திட்டங்களை தவிடுபொடியாக்கிய இந்திய ராணுவம்..! ராகுல் காந்தி பாராட்டு..!

13 November 2020, 8:47 pm
Rahul_Gandhi_UpdateNews360 (2)
Quick Share

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தீபாவளிக்கு முன்னதாக, பாகிஸ்தானுக்கு எதிராக இன்று ராணுவம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையை பாராட்டி, இராணுவத்தின் ஒவ்வொரு வீரருக்கும் வீர வணக்கம் தெரிவித்தார்.

இன்று ஜம்மு காஷ்மீரின் யூரி செக்டரில், பாகிஸ்தான் மேற்கொண்ட பல யுத்த நிறுத்த மீறல்களில் பி.எஸ்.எஃப் துணை ஆய்வாளர் உட்பட நான்கு பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் காலையிலிருந்து இந்தியாவும் பதிலடி நடவடிக்கையைத் தொடங்கியது. அப்போது எல்லையில் உள்ள அனைத்து பி.எஸ்.எஃப் பிரிவுகளும் கடும் துப்பாக்கிச் சூட்டை எதிர்கொண்டன. 

பாகிஸ்தான் ராணுவம் யுத்த நிறுத்த மீறல் மூலம், தீவிரவாதிகளை ஊடுருவ செய்ய மேற்கொண்ட முயற்சி வெற்றிகரமாக தோற்கடிக்கப்பட்டது மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு முழுவதும் பாகிஸ்தான் இராணுவத்தின் உள்கட்டமைப்புக்கு இராணுவம் வெற்றிகரமாக சேதத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாகிஸ்தானின் தீங்கு விளைவிக்கும் திட்டங்களை விமர்சித்த ராகுல் காந்தி, “பாகிஸ்தான் போர்நிறுத்தத்தை மீறும் போதெல்லாம், அதன் அச்சங்களும் பலவீனங்களும் இன்னும் தெளிவாகின்றன.” எனத் தெரிவித்தார்.

“பண்டிகைகளின் போது கூட நம் ஜவான்கள் தங்கள் வீடுகளிலிருந்து  வெகுதூரம் விலகி, நம் எல்லைகளை காத்து, பாகிஸ்தானின் அருவருப்பான திட்டங்களை அழிக்கிறார்கள்” என்று ராகுல் மேலும் கூறினார்.

Views: - 37

0

0

1 thought on “பாகிஸ்தானின் திட்டங்களை தவிடுபொடியாக்கிய இந்திய ராணுவம்..! ராகுல் காந்தி பாராட்டு..!

Comments are closed.