கட்சியின் அறக்கட்டளையில் முறைகேடு..! விசாரிக்கக் கோரி அரசுக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ் எம்எல்ஏ..!

3 November 2020, 3:10 pm
aditi_singh_updatenews360
Quick Share

உத்தரபிரதேசத்தில் காங்கிரசின் நாளுக்கு நாள் மோசமாகி வருவதாகத் தெரிகிறது. முன்னாள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அன்னு டாண்டன் கட்சியை விட்டு வெளியேறியதும், ஒரு மாவட்ட கட்சித் தலைவர் இரண்டு பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதும் கட்சியின் நிலையை அதலபாதாளத்திற்கு அனுப்பியுள்ள நிலையில், தற்போது கட்சியின் கிளர்ச்சி எம்.எல்.ஏ. ஒருவர் கட்சியின் அறக்கட்டளை பொருளாதார மோசடியில் ஈடுபடுவதாக பகீர் குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.

காங்கிரசின் அறக்கட்டளையான கமலா நேரு கல்விச் சங்கத்தின் செயல்பாட்டில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படுவது குறித்து விசாரணை நடத்தக் கோரி கிளர்ச்சி எம்.எல்.ஏ., அதிதி சிங் பொருளாதார குற்றப் பிரிவு இயக்குநர் ஜெனரலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதிதி சிங் கூறுகையில், “கமலா நேரு கல்விச் சங்கத்தில் நடந்த நிதி முறைகேடுகள் குறித்து விசாரிக்க நான் பொருளாதார குற்றப்பிரிவுக்கு கடிதம் எழுதியுள்ளேன். அறக்கட்டளை ஒருபோதும் அது அமைக்கப்பட்ட நோக்கத்தின்படி, நிலத்தை சிறுமிகளின் கல்வியை மேம்படுத்துவதற்கு ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை. 600 பேருக்கு தினசரி ரொட்டி வழங்கும் சுமார் 150 கடைகள் இருப்பதால், நிலத்தை வேறு நோக்கங்களுக்காக மாற்றுவது சட்டவிரோதமானது.” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அறக்கட்டளையின் உறுப்பினர்களை கடுமையாக விமர்சித்த அதிதி சிங், “பிஎம் கேர்ஸ் நிதியத்தின் வெளிப்படைத்தன்மையை கேள்விக்குட்படுத்தும் நபர்கள் இந்த அறக்கட்டளையின் மூலம் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதையும் வெளிப்படுத்த வேண்டும். உத்தரபிரதேச முதல்வர் அலுவலகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவுக்கு நான் இது குறித்து கடிதம் எழுதியுள்ளேன் மற்றும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள நிதி முறைகேடுகள் சம்பந்தப்பட்ட விஷயத்தை விசாரிக்க உள்துறைக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.” எனத் தெரிவித்தார்.

அவர் மேலும், “அறக்கட்டளை 1970’களில் ரே பரேலி நகரில் கல்வி நோக்கங்களுக்காக 30 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டது. அது வழங்கப்பட்ட நோக்கத்திற்காக பயன்படுத்தப்படவில்லை என்றாலும், காங்கிரஸ் தலைவர்கள் இப்போது அதை விற்க முயற்சிக்கின்றனர். எனது சண்டை அறக்கட்டளையின் மோசடி முறைகளுக்கு எதிராகவும், பல தசாப்தங்களாக அங்கு வசித்து வரும் 100’க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்காகவும் தான்.” எனக் கூறினார்.

இந்நிலையில் ரே பரேலி காங்கிரஸ் தலைவர் பங்கஜ் திவாரி, “இந்த விவகாரம் வழக்குகளின் கீழ் உள்ளது. மேலும் நிலத்தை காலி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே நேரத்தில் பல ஆண்டுகளாக அங்கு வசித்து வரும் குடும்பங்கள் குறித்து அரசாங்கம் ஏதாவது செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

கமலா நேரு கல்விச் சங்கம் 1976’ஆம் ஆண்டில் ரே பரேலியின் சிவில் லைன்ஸ் பகுதியில் சித்தாலியைச் சேர்ந்த கைலாஷ் சந்திராவிடம் இருந்து ஆண்டுக்கு 1,135 ரூபாய் வாடகைக்கு அமைக்கப்பட்டது. சிறுமிகளுக்கான கல்வியை மேம்படுத்துவதற்காக இந்த அறக்கட்டளை 30 ஆண்டுகளாக நிலத்தை குத்தகைக்கு எடுத்தது. இருப்பினும், இந்த நிலத்தில் இதுவரை எந்த கட்டுமான நடவடிக்கைகளும் நடைபெறவில்லை.

புதுடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மாமியார் உமா சங்கர் தீட்சித், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் தனிப்பட்ட உதவியாளர் யஷ்பால் கபூர் மற்றும் முன்னாள் அமைச்சர் ஷீலா கவுல் உட்பட இதன் எட்டு உறுப்பினர்கள் இதுவரை இறந்துள்ளனர்.

2003’ஆம் ஆண்டில், ஒரு புதிய குழு அமைக்கப்பட்டது. இதில் கவுல் குடும்ப உறுப்பினர்கள் முன்னாள் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் மற்றும் மூத்த வழக்கறிஞர் லலித் பாசின் ஆகியோர் அடங்குவர்.

கமலா நேரு கல்விச் சங்கம் 2003’ஆம் ஆண்டில் இந்த நிலத்தை ஒரு ஃப்ரீஹோல்ட் சொத்தாக மாற்றி 2016’இல் விற்க முடிவு செய்தது. தோராயமான மதிப்பீட்டின்படி, சுமார் 150 கடைகள் இங்கு உள்ளன. அவை சுமார் 600 பேருக்கு வருமான ஆதாரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 23

0

0

1 thought on “கட்சியின் அறக்கட்டளையில் முறைகேடு..! விசாரிக்கக் கோரி அரசுக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ் எம்எல்ஏ..!

Comments are closed.