ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் விநியோகம்: டெண்டர் மூலம் தனியார் வசம் ஒப்படைப்பு..!!

2 July 2021, 1:20 pm
Quick Share

திருமலை: திருப்பதியில் லட்டு பிரசாத விநியோகம் டெண்டர் மூலம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திருமலையில் உள்ள லட்டு பிரசாத மையங்களில் வங்கி ஊழியர்கள் மற்றும் ஸ்ரீவாரி சேவா உறுப்பினர்கள் இணைந்து பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் விநியோகம் செய்து வந்தனர். இந்நிலையில் டெண்டர் மூலம் பெங்களூரு கேவிஎம் இன்ஃபோ எனும் தனியார் நிறுவனத்தின் ஊழியர்களை மொத்தம் 164 இடங்களில் பணியில் அமர்த்த தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.

j&k Tirupati Temple- Updatenews360

இதில் முதல் கட்டமாக லட்டு பிரசாத மையங்களில் பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யும் பணியை தனியார் ஊழியர்கள் நேற்று தொடங்கினர். தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி இதனை ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது,

பக்தர்களுக்கு தரமான சேவை வழங்க சில சேவைகள் தனியார் வசம் வழங்கப்படுகிறது. லட்டு விநியோக மையங்கள், வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் உள்ள ஸ்கேனிங் பகுதி, திருப்பதியில் உள்ள சர்வ தரிசன டோக்கன் விநியோக மையங்கள், தங்கும் அறை ஒதுக்கும் மையங்கள் ஆகிய இடங்களில் மொத்தம் 430 தனியார் ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர் என்று தெரிவித்தார்.

Views: - 152

0

0