தீபாவளியன்று World Record : ஒரே நேரத்தில் 9 லட்சம் ஒளிரும் விளக்குகள் ஏற்றி சாதனைக்கான முயற்சி

Author: Babu Lakshmanan
4 November 2021, 4:21 pm
UP lights- updatenews360
Quick Share

லக்னோ : உத்தரபிரதேசத்தில் ஒரே நேரத்தில் 9 லட்சம் ஒளிரும் விளக்குகளை ஏற்றி அயோத்தியில் உலக சாதனை படைக்கப்படுகிறது.

தமிழகத்தில் ஒருநாள் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையானது வட மாநிலங்களில் தொடர்ந்து 5 நாட்கள் கொண்டாடப்படும். முதல்நாளான நேற்று முன்தினம் உலோகப் பொருட்கள் வாங்கும் நாளாகும். இந்த தினத்தன்று ஒவ்வொருவரும் தங்களின் வீட்டில் ஏதேனும் ஒரு உலோகப் பொருட்கள் வாங்க வேண்டும் என்பதாகும். இரண்டாவது நாளான நேற்று சின்ன தீபாவளி கொண்டாடப்படுகிறது. இது லஷ்மி தங்கள் வீடுகளுக்கு வரும் நாளாகக் கருதப்படுகிறது.

மூன்றாவது நாளான இன்று பெரிய தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தன்று, புத்தாடைகள் உடுத்தி, பூஜைக்கு பின் பட்டாசுகளை வெடித்து பொது மக்கள் உற்சாகம் அடைகின்றனர். நாளை கோவர்தன் பூஜையும், ஐந்தாவது நாள், ‘பைய்யா தோஜ்’ என்றும் கொண்டாடப்படுகிறது.

உத்தரப்பிரதேசம் அயோத்தியின் ராமர் கோவிலில், கடந்த வருடம் சுமார் ஏழு லட்சம் ஒளிவிளக்குகள் ஏற்றி உலக சாதனை படைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வருடம் அதேநாளில், அயோத்தி முழுவதிலும் சுமார் ஒன்பது லட்சம் ஒளிரும் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. இன்று மாலை 4.45 மணிக்கு அனைத்து ஒளிவிளக்குகளும் ஏற்றும் பணி தொடங்கும். சுமார் 40 நிமிடங்களில் தொடர்ந்து ஐந்து நிமிடங்களுக்கு என அனைத்தும் ஒரே சமயத்தில் ஒளிர உள்ளன. பாஜக ஆளும் அரசால் செய்யப்படும் இந்நிகழ்வு, உலக சாதனை படைக்கிறது.

Views: - 477

0

0