தனியாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட டாக்டர் கணவர்! சும்மா விடுவாரா மனைவி..

28 January 2021, 9:54 am
Quick Share

கொரோனா தடுப்பூசியை தன்னை விட்டுவிட்டு, தனியாக சென்று போட்டுக் கொண்ட டாக்டர் ஒருவர், அவரது மனைவியிடம் இதுகுறித்து கூற, அவர் கோபத்தில் கொப்பளிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கொரோனா அரக்கனை தடுப்பூசி கண்டுபிடித்ததன் மூலம் உலகம் தற்போது கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா முன்கள பணியாளர்கள் தற்போது முதல்கட்டமாக, தடுப்பூசி போட்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனா தடுப்பூசியை தனியாக போட்டுக் கொண்ட டில்லி டாக்டரான அகர்வால் தனது மனைவியுடன் தான் பேசிய வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றி உள்ளார். அது தற்போது வைரலாகி உள்ளது.

இதயநோய் நிபுணரான அவர், தனது மனைவியிடமிருந்து மொபைல் அழைப்பு வந்தபோது, அவர் தன்னை நேரலையில் ஒளிபரப்பி கொண்டிருந்தார். தான் தடுப்பூசி போட்டதை அவர் தனது மனைவியிடம் கூறி, நான் ஆய்வுக்காக சென்றபோது, அவர்கள் தடுப்பூசி போட சொன்னார்கள். அதனால் போட்டுக் கொண்டேன் என பதிலளிக்கிறார். இதனை ஏற்றுக் கொள்ள முடியாத அவரது மனைவி, “ஏன் என்னை உங்களுடன் அழைத்துச் செல்லவில்லை?” மற்றும் “என்னிடம் பொய் சொல்லாதீர்கள்.” என அடுத்தடுத்து கேள்வி கேட்கிறார்.

திங்கள் கிழமை உன்னை தடுப்பூசி போட அழைத்து செல்கிறேன் என அவர் கூற முயற்சிக்கிறார். பின் நான் தற்போது நேரலையில் நாம் பேசுவதை ஒளிபரப்பி கொண்டிருக்கிறேன் என அவர் கூற, நான் இப்போதே நேரலைக்கு வந்து உன்னைப் பார்ப்பேன் என அவரது மனைவி பதிலளிக்கிறார். அவர்கள் உரையாடும் வீடியோ, பேஸ்புக்ல டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஒருவர் ‘மனைவி மனைவிகளாகவே இருப்பார்கள்’ என பதிவிட, மற்றொருவர், ‘திருமதி அகர்வால் உண்மையான முதலாளி யார் என்பதை காட்டி உள்ளார்’ என பதிவிட்டுள்ளார். வைரலான பின், அறிக்கை ஒன்றை வெளியிட்ட அகர்வால், ‘இந்த கடினமான காலங்களில் மக்களுக்கு ஒரு கணம் சுறுசுறுப்பு அளித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன், எல்லா சிரிப்பும் சிறந்த மருந்தாகும்’ என தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0