கேள்வி நேரத்தை ரத்து செய்ய கொரோனா தொற்றை காரணம் காட்டுவதா..? – காங்கிரஸ் கேள்வி..!

3 September 2020, 4:58 pm
Quick Share

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 14’ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 1’ஆம் தேதி நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் நாடாளுமன்றத்திற்கு வரும் உறுப்பினர்கள் கொரோனா தடுப்பு நெறிமுறைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் கேள்வி கேட்க அனுமதியில்லை என்று பாஜக அறிவித்துள்ளது. இதற்கு, மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு கேள்வி கேட்க தடை விதிப்பதா என்று பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே இது குறித்து பேசிய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் மகேஷ் தாப்சே, பல்வேறு நிலைகளில் பாஜக அரசு தோல்வி அடைந்துள்ளதால், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளை தவிர்க்கும் வகையில் கேள்வி நேரத்தை ரத்து செய்ய கரோனாவை பாஜக அரசு காரணம் காட்டுவதாக குற்றம் சாட்டினார்.

மேலும், கேள்வி நேரத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை கேள்வி கேட்க ஏதுவாக மின்னணு ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.

Views: - 0

0

0