தண்ணீரில் தத்தளித்த உரிமையாளர்… நாய் செய்த செயல்…!நெகிழ வைக்கும் வீடியோ!

8 July 2021, 10:31 pm
Quick Share

நீச்சல் குளம் ஒன்றில் தண்ணீரில் தத்தளிப்பதாக நாடகமாடும் உரிமையாளரை காப்பாற்றுவதற்காக நாயும் தண்ணீரில் குதிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

மனிதர்களின் வளர்ப்பு பிராணியில் மிகவும் புத்தி கூர்மை, அன்பு, நன்றி உணர்ச்சி, கீழ் படிதல் என அனைத்து குண நலன்களும் கொண்டது நாய்தான். அதனால்தான், உலகம் முழுவதும் மக்கள் நாயை செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர். குறிப்பாக நாய் தனது எஜமான் ஆபத்தில் இருந்தால் உடனடியாக அதை உணர்ந்து அவரை காப்பாற்ற முயலும் குணம் கொண்டது. இது தொடர்பாக பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தற்போது அது போல் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருக்கும் ஒரு நபர், தனது செல்ல நாயை பரிசோதிப்பதற்காக நீரில் மூழ்குவது போல் நடிக்கிறார். அதைக்கண்ட நாய் அங்கும் இங்கும் ஓடுகிறது. தனக்கு நீச்சல் தெரியுமோ இல்லையோ என்பதை கூட யோசிக்காமல் தண்ணீரில் குதித்து அவரை தழுவிக்கொள்கிறது. இதனைக்கண்ட அவரின் நண்பர்கள் மெய்சிலித்து மகிழ்ச்சியில் கூக்குரல் இட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, அந்த நாயை பாராட்டுகின்றனர்.

Views: - 106

0

0