சுங்கத்துறை விசாரணை வளையத்தில் கேரள சபாநாயகரின் செயலாளர்..! டாலர் கடத்தல் வழக்கில் அதிரடி திருப்பம்..!

By: Sekar
8 January 2021, 3:57 pm
Kerala_Speaker_Sri_Ramakrishnan_UpdateNews360
Quick Share

கேரள சட்டமன்ற சபாநாயகரின் தனி செயலாளர் செயலாளர் கே.அய்யப்பன் இன்று சுங்கத் துறையின் தங்கக் கடத்தல் மற்றும் அமெரிக்க டாலர் நோட்டுக்கள் கடத்தல் வழக்குகள் குறித்த விசாரணையில் ஆஜரானார்.

ஜனவரி 5’ம் தேதி விசாரணைக்கு வருமாறு சுங்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தன்னால் வரமுடியாது என தொலைபேசி மூலம் தகவல் அளித்தார்.

பின்னர் சுங்க அதிகாரிகள் அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி விசாரணைக்கு வருமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவர் பட்ஜெட் அமர்வு காரணமாக பிஸியாக இருப்பதால் வர முடியவில்லை என்று பதிலளித்தார்.

சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணனின் ஊழியர்கள் சபையின் வணிக விதிகள் மற்றும் நடைமுறைகளின் பிரிவு 165’ன் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளதாக சுங்கத்துறைக்கு கேரள தலைமைச் செயலகம் பதிலளித்தது. எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, இந்த பாதுகாப்பு சட்டமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மட்டுமே என்றும், சபாநாயகரின் ஊழியர்களுக்கு அல்ல என்றும் கூறியுள்ளன.

இந்த சூழலில், சுங்கத்துறை மீண்டும் அய்யப்பனின் குடியிருப்பு முகவரிக்கு ஒரு அறிவிப்பை அனுப்பி, ஜனவரி 8’ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கேட்டுக் கொண்டது.

தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் மற்றும் இணை குற்றம் சாட்டப்பட்ட பி.எஸ்.சரித் ஆகியோர் சுங்கத்துறை முன் ஆஜரானபோது, கேரள சபாநாயகருக்கு இதில் தொடர்பு உள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது. 

சபாநாயகரின் பயண நாட்குறிப்பைப் பராமரிப்பதற்கும் அவரது சுற்றுப்பயணத் திட்டங்களைத் தயாரிப்பதற்கும் பொறுப்பான அதிகாரி அய்யப்பன் என்பதால், குற்றம் சாட்டப்பட்ட தங்கக் கடத்தல் வழக்கில் குறிப்பிடப்பட்ட தேதிகள் மற்றும் காலங்களுடன் ஏதேனும் பொருத்தம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த சுங்க அதிகாரிகள் அவரை அழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 67

0

0