காங்கிரஸ் சொல்லும் பொய்களை நம்ப வேண்டாம்..! மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அமித் ஷா வலியுறுத்தல்..!

17 January 2021, 9:27 pm
amit_shah_karnataka_updatenews360
Quick Share

உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்கள் தங்கள் முறை வரும்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசி குறித்து காங்கிரஸ் சொல்லும் பொய்யை நம்ப வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ள அமித் ஷா, இந்த இரண்டு தடுப்பூசிகளும் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அவை முற்றிலும் பாதுகாப்பானவை என்றும் கூறினார்.

“கொரோனா தடுப்பூசி குறித்து காங்கிரஸ் தலைவர்கள் கேள்விகளை எழுப்பினர். எதிர்ப்பைத் தவிர வேறு எதையும் நீங்கள் செய்ய முடியாது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் குறைந்த பட்சம் முயற்சிகளைத் தடுக்க வேண்டாம்.” என அமித் ஷா மேலும் கூறினார்.

கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் சந்தேகம் எழுப்பிய பின்னர் அமித் ஷாவின் அறிக்கை வந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 16’ஆம் தேதி உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை துவக்கிய பின்னர், 3’ஆம் கட்டத்தின் கட்டாய சோதனைகள் இல்லாமல் தடுப்பூசிகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதாக காங்கிரஸ் கூறியது.

காங்கிரஸ் தலைவரும், ஆனந்த்பூரைச் சேர்ந்த எம்.பி.யுமான மணீஷ் திவாரி, தடுப்பூசி மிகவும் நம்பகமானதா என்று கேள்வியெழுப்பியதோடு, பின்னர் எந்த முக்கியமான அரசாங்க தலைவர்கள் மற்றும் அதிகாரிகளும் ஏன் கொரோனா தடுப்பூசி எடுக்கவில்லை எனக் கேள்வியெழுப்பியிருந்தார்.

திவாரி ட்வீட்டிற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், தடுப்பூசி குறித்து கட்சி அவநம்பிக்கை மற்றும் வதந்திகளை பரப்புவதாக குற்றம் சாட்டிய காங்கிரஸ் எம்.பி. புகழ்பெற்ற மருத்துவர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படங்களை கண்ணைத் திறந்து பார்க்குமாறு கூறியுள்ளார்.

Views: - 5

0

0