“ஒரு இந்துவாக என்னால் இதைச் செய்யவே முடியாது”..! பாபர் மசூதி அடிக்கல் நாட்டு குறித்து யோகி ஆதித்யநாத் பரபரப்புப் பேட்டி..!

7 August 2020, 3:55 pm
yogi_yogi_updatenews360
Quick Share

மசூதியின் அடிக்கல் நாட்டும் விழாவிற்கு அயோத்தியில் இதேபோன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்களா என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் கேட்டபோது, ஒரு இந்துவாக இருப்பதால் தன்னால் அதை செய்ய முடியாது என்று கூறினார். அதே சமயத்தில் ஒரு மாநிலத்தின் முதல்வராக மதங்கள், சாதிகள் மற்றும் சமூகங்களுக்கு இடையில் வேறுபாடு காட்டவில்லை என்றும் கூறினார்.

எனினும், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தன்னை முதலில் மசூதி அடிக்கல் நாட்டும் விழாவிற்கு அழைப்பார்களா என கேள்வியெழுப்பினார். மேலும் ஒரு யோகியாகவும், இந்து மதத்தை கடைப்பிடிக்கும் ஒருவராகவும், தனது மதத்தைப் பின்பற்றுவதில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் உரிமை இருப்பதால் இதுபோன்ற எந்தவொரு நிகழ்விலும் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறினார்.

“மசூதி அடிக்கல் நாட்டும் விழாவிற்கு நான் அழைக்கப்படுவேன் என்று நினைக்கிறீர்களா? இது அவர்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. எனவே, இது குறித்து எனக்கு எந்த குழப்பமும் இல்லை.” என்று ராமர் கோவில் பூமி பூஜை நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு மூன்று தொலைக்காட்சி சேனல்களுக்கு அளித்த பேட்டியில் முதல்வர் கூறினார்.

போலி மதச்சார்பின்மைவாதிகளை எதிர்த்து யோகி, “போலி மதச்சார்பின்மை” நாட்டில் பயங்கரவாதம், கலவரம் மற்றும் நக்சலிசம் மற்றும் இந்துக்களை எதிர்ப்பதற்கான அடிப்படை என்று குறிப்பிட்டார்.

கோவில் இயக்கம் போலி மதச்சார்பின்மை எனும் பொய்யை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் அயோத்தியில் தீப உற்சவ விழாவில் பங்கேற்கும் முஸ்லீம் ஆதிக்கம் கொண்ட இந்தோனேசிய மக்களை மேற்கோள் காட்டி உத்தரபிரதேச முதல்வர், இந்தியாவில் விமர்சகர்கள் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

தீப உற்சவ விழாவில் கலந்து கொள்ளும் பெரும்பான்மையான முஸ்லீம்களிடம், அதைப் பற்றி நான் அவர்களிடம் கேட்டபோது, அவர்கள் தங்கள் மதத்தை பின்பற்ற உரிமை உண்டு என்றும், அதே நேரத்தில் எந்த மதத்தைப் பின்பற்றினாலும், அவர்களால் தங்கள் மூதாதையர்களை மாற்ற முடியாது என்றும் தெரிவித்ததாகக் கூறினார்.

Views: - 8

0

0