திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொட்டு மருந்து முகாம்கள் : பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடு!!

31 January 2021, 3:08 pm
Tirupati Temple- Updatenews360
Quick Share

ஆந்திரா : ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருமலையில் ஏழுமலையான் பக்தர்களின் வசதிக்காக இன்று முதல் வரும் 2 தேதி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் மூன்று நாட்களுக்கு நடைபெறும் என்று திருப்பதி தேவஸ்தான தலைமை மருத்துவ அதிகாரி கோயில் முன்பு இன்று தொடங்கி வைத்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்களின் இன்று முதல் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வரை மூன்று நாட்கள் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து செலுத்துவதற்காக மருத்துவ பணியாளர்கள் மற்றும் என்சிசி மாணவர்கள் சேவை செய்ய உள்ளனர். இந்த 3 நாட்களுக்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை போலியோ சொட்டு மருந்து செலுத்தப்படும்.

ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்காக திருமலையில் 20 முகாம்கள் உள்ளூர் மக்களுக்காக 4 முகாம்கள் அமைக்கப்படவுள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாளை காலை 10 மணிக்கு எஸ் வி உயர் நிலைப் பள்ளி மாணவர்களுடன் பேரணி நடத்தப்படும் இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் 5 வயதுக்கு உட்பட்ட 52லட்சத்து 72 ஆயிரம் 354 குழந்தைகளுக்கு மூன்று நாள் போலியோ சொட்டு ஆந்திர சுகாதாரத் துறை சார்பில் ஏற்பாடு செய்துள்ளது .

Views: - 0

0

0