இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ட்ரோன்..! பி.எஸ்.எஃப் வீரர்களைக் கண்டதும் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் பதுங்கியது..!

29 November 2020, 12:59 pm
Drone_UpdateNews360
Quick Share

நேற்று இரவு ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா செக்டரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டில் ஒரு ட்ரோன் கண்டுபிடிக்கப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எஃப்) இன்று தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.புரா செக்டரின் ஆர்னியா பகுதியில் ரோந்து பணியில் இருந்த பி.எஸ்.எஃப் வீரர்களால் வானத்தில் சுற்றிக்கொண்டிருந்த இந்த ட்ரோன் கண்டறியப்பட்டது. பின்னர் இந்த ட்ரோன் பாகிஸ்தானுக்கு திரும்பிச் சென்றதாக பி.எஸ்.எஃப் தெரிவித்துள்ளது. இப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையும் பாதுகாப்புப் படையினரால் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம், ஜம்மு காஷ்மீரில் பூச் மாவட்டத்தின் மெந்தர் செக்டரில், போர் நிறுத்த ஒப்பந்த மீறலுக்கு முன்னதாக கட்டுப்பாட்டுக் கோட்டில் ட்ரோன் இயக்கம் கவனிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த மாதம், ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் கெரான் செக்டரில் பாகிஸ்தான் ராணுவ குவாட்கோப்டரை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது

ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் சமீபத்தில் பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் தள்ள பாகிஸ்தான் எல்லை தாண்டிய நிலத்தடி சுரங்கங்களையும், அவர்களுக்கு ஆயுதங்களை வழங்க ட்ரோன்களையும் பயன்படுத்துவதாக கூறியிருந்தார்.

செப்டம்பர் மாதம், ஜம்மு-காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் ட்ரோனைப் பயன்படுத்தி பாகிஸ்தான் ஆயுதங்களையும், இந்திய ரூபாய் நோட்டுக்களையும் வழங்கியது கண்டறியப்பட்டது.

இதேபோன்ற முயற்சியை இந்த ஆண்டு ஜூன் மாதம் கத்துவா மாவட்டத்தில் உள்ள எல்லையில் மேற்கொண்ட நிலையில், எல்லை பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்) சாமர்த்தியமாக அதை முறியடித்தது.

எல்லையில் இந்திய வீரர்கள் விழிப்புடன் இருப்பதோடு, பாகிஸ்தான் ஒரு மடங்கு தாக்கினால், பலமடங்கு திருப்பித் தாக்கும் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் தற்போது நிலத்தடி சுரங்கங்களையும், ட்ரோன்களையும் பயன்படுத்தி வருகிறது.

இதனால் இந்திய ராணுவத்திற்கு ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் சிறப்புப் பயிற்சியை வழங்க ராணுவம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Views: - 16

0

0