போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கிய தீபிகா படுகோனே! பிரபல தமிழ் நடிகையிடம் விசாரணை நடத்த திட்டம்!!
23 September 2020, 6:01 pmபோதைப்பொருள் விவகாரம் இந்தியாவை உலுக்கி எடுத்து வருகிறது. நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் துவங்கிய மர்மம் இன்னும் நீடித்து வருகிறது. சுஷாந்த் வழக்கில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டது அறிந்த காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம் ஏற்பட்டு வருகிறது.
இதன் எதிரொலியாக போதைப் பொருள் விவகாரத்தில் நடிகைகள் பலர் கைதாகினர். பாலிவுட்டில் சுஷாந்த் காதலி ரியாவை தொடர்ந்து பல நடிகையிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதே போல கன்னட திரையுலகில் நடிகை சஞ்சனா கல்ராணி, டிவி நடிகை அனிகா கைது செய்யப்பட்டனர்.
தற்போது கன்னட திரையுலகினருக்கு போதை பொருள் சப்ளை செய்ததாக கைதான டிவி நடிகை அனிகாவிடம் இந்தி நடிகை தீபிகா படுகோனே போதைப் பொருள் வாங்கியதாக தகவல்கள் வெளியானது. பானஸ்வாடியில் கைதான அனிகாவுடம் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் வாட்ஸ் ஆப் சேட்டிங்க மூலம் தொடர்பு கொண்டு தீபிகா போதை பொருள் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
அதுவும், வாட்ஸ் அப்பில் போதைப் பொருள் வாங்க Code word பயன்படுத்தியதாகவும், இதில் டி என்றால் தீபிகா, எஸ் என்றால் ஸ்ரதா கர், என் என்றால் ஹர்ஷா நம்ரதா, ஜேகே என்றால் ஜெயா சாஹா எனவும் தெரியவந்துள்ளது. போதைப் பொருள் பயன்படுத்தியதாக இந்திய திரையுலகத்தினர் பல்வேறு நடிகர் நடிகையிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நடிகைகள் தீபிகா படுகோனே, சாரா அலிகான் மற்றும் ஷ்ரதா கபூர் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதில் தமிழ் பட நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
அடுத்த மூன்று நாட்களில் மூன்று நடிகைகளை நெரில் ஆஜராக வேண்டும் என மும்பை பொருள் தடுப்பு காவல்துறை உத்தரவிட்டுள்ளது. போதைப் பொருள் விவகாரத்தில் மும்பை பொருதுள் தடுப்பு காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.