அடுத்த 30 ஆண்டுகளில் இந்திய நகரங்களுக்கு ஏற்படப்போகும் கடும் சிக்கல்..! எச்சரிக்கும் சர்வதேச அமைப்பு..!

4 November 2020, 4:45 pm
Water_Crisis_Indian_Cities_UpdateNews360
Quick Share

உலக வனவிலங்கு நிதியம் நடத்திய சமீபத்திய ஒரு ஆய்வில், 2050’க்குள் இந்தியாவில் அமைந்துள்ள 30 நகரங்கள் கடுமையான நீர் அபாயங்களை சந்திக்க நேரிடும் என்று தெரிய வந்துள்ளது. கடந்த திங்களன்று வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், அவசர மற்றும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் மட்டுமே நீர் அபாயங்களைத் தவிர்க்க முடியும் என்று கூறியுள்ளது.

அடுத்த 30 ஆண்டுகளில் 100 நகரங்கள் மிகப்பெரிய நீர் அபாயங்களை சந்திக்கக்கூடும் என்று உலக வனவிலங்கு நிதியத்தின் நீர் இடர் வடிகட்டி கணக்கெடுப்பு கூறியுள்ளது. நீர் அபாயங்களுக்கு உள்ளாகக்கூடிய நகரங்களின் பட்டியலில் இந்தியாவில் 30 நகரங்களும் பெயரிடப்பட்டுள்ளன. டெல்லி, ஜெய்ப்பூர், இந்தூர், அமிர்தசரஸ், புனே, ஸ்ரீநகர், கொல்கத்தா, பெங்களூரு, மும்பை, கோழிக்கோடு மற்றும் விசாகப்பட்டினம் ஆகியவை இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளன.

நகர்ப்புற திட்டமிடல் மற்றும் ஈரநில பாதுகாப்பு ஆகியவை இந்தியாவில் நன்னீர் அமைப்புகள் அப்படியே இருப்பதை உறுதி செய்ய எடுக்கக்கூடிய சில நடவடிக்கைகள் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. தண்ணீரைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய நிலையில், நீர் பயன்பாட்டைக் குறைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில், நாட்டின் பல நகரங்கள் நீர் நெருக்கடியுடன் போராடி வரும் நிலையில் இந்த அறிக்கை மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா முதல் தமிழ்நாடு வரை, நிலத்தடி நீர்மட்டம் குறைதல், உள்கட்டமைப்பு இல்லாமை மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக மாநிலங்கள் தங்கள் நீர் தேவைகளை பூர்த்தி செய்ய சிரமப்பட்டு வருகின்றன.

உலக வனவிலங்கு நிதியத்தின் இந்தியா கிளையின் திட்ட இயக்குனர் செஜல் வோரா கூறுகையில், “இந்தியாவின் சுற்றுச்சூழலின் எதிர்காலம் அதன் நகரங்களில் உள்ளது. இந்தியா வேகமாக நகரமயமாக்கப்படுவதால், இந்தியாவின் வளர்ச்சிக்கும், நிலைத்தன்மைக்கும் நகரங்கள் முன்னணியில் இருக்கும்.

வெள்ளம் மற்றும் நீர் பற்றாக்குறை, நகர்ப்புற நீர்நிலைகள் மற்றும் ஈரநிலங்களை மீட்டெடுப்பது போன்ற இயற்கையை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகள் நன்மைகளை வழங்கக்கூடும். நகரங்களின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதை மீண்டும் உருவாக்கி மீண்டும் கற்பனை செய்வதற்கான வாய்ப்பு இதுவாகும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 13

0

0