விநாயகர் ஊர்வலத்திற்காக பாதுகாப்புக்கு வந்த டிஎஸ்பி, எஸ்பி திடீர் நடனம் : மெய்மறந்து ஆடிய வீடியோ வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 September 2022, 1:19 pm
Police Dance - Updatenews360
Quick Share

காக்கி சீருடைகள் கடுமையான தோற்றத்தில் காணப்பட்டாலும் பக்தி என்று வந்துவிட்டால் அவ்வளவுதான்… விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் போலீஸ் அதிகாரிகள் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள தாடிபத்திரியில் மூன்றாவது நாளான நேற்று விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலையை பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க நடனமாடி வீதி ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது பாதுகாப்புக்காக சென்று இருந்த காவல் ஆய்வாளர் மற்றும் டிஎஸ்பி, எஸ்.பி ஆகியோர் பக்தர்களுடன் இணைந்து நடனம் ஆடினர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Views: - 595

2

0