மீண்டும் மிரட்டும் கொரோனா: டெல்லி, குஜராத்தில் வருகிற 30ம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல்..!!

7 April 2021, 8:46 am
delhi_lockdown_updatenews360
Quick Share

குஜராத்: கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் டெல்லி, குஜராத்தில் வருகிற 30ம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

குஜராத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,24,878 ஆக உள்ளது. 17,348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4,598 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருவதால் குஜராத்தின் 20 நகரங்களில் வருகிற 30ம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதன்படி இரவு 8 மணி முதல் காலை 6 மணிவரை இன்றில் இருந்து இந்த உத்தரவு நடைமுறைக்கு வரவுள்ளது.

இதனை முதலமைச்சர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார். இதுபற்றி அதிகாரிகளுடன் அவர் ஆய்வு கூட்டம் ஒன்றை நடத்தினார். அதற்கு பின்னர் ரூபானி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது,

திருமண விழாக்களில் 100 பேர் அனுமதிக்கப்படுவர். பெரிய நிகழ்ச்சிகள் அனைத்தும் வருகிற 30ம் தேதி வரை தள்ளி போட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என கூறியுள்ளார்.

வார ஊரடங்கு பற்றி முடிவு எடுக்கும்படி குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு ஏற்ப அரசு இந்த முடிவை அறிவித்து உள்ளது. அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு டெல்லியிலும் வருகிற 30ம் தேதி வரை இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Views: - 19

0

0