கட்டு கட்டாக போலிக் கல்விச்சான்றிதழ் : கத்தை கத்தையாக பணம்!! தம்பதி உட்பட 7 பேர் கைது!!

13 September 2020, 3:02 pm
Andhra 7 Arrest - Updatenews360
Quick Share

ஆந்திரா : தன்னார்வ தொண்டு நிறுவனம் என்ற பெயரில் கட்டுக்கட்டாக போலி சர்டிபிகேட் அச்சடித்து கத்தை கத்தையாக பணம் சம்பாதித்த தம்பதி உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஸ்வரலு என்பவர் உரக்கடை நடத்துவதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பத்துடன் தன்னுடைய கல்வி சான்றிதழையும் அவர் இணைத்திருந்தார்.

வெங்கடேஸ்வரலு விண்ணப்பத்தை பரிசீலித்த அதிகாரிகளுக்கு அவருடைய கல்வி சான்றிதழ் மீது சந்தேகம் ஏற்பட்டது. எனவே இதுபற்றி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வெங்கடேஸ்வரலுவை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் விசாகப்பட்டினத்தை சேர்ந்த சீனிவாசன், சுஜாதா தம்பதி ஜவகர்லால் நேரு பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று நிர்வாகித்து வரும் நிலையில் அதே பெயரில் ஜவஹர்லால் நேரு டெக்னிக்கல் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகின்றனர்.

அந்த நிறுவனத்தின் பெயரில் பணம் வாங்கிக்கொண்டு சர்டிபிகேட் கொடுத்தனர் என்று கூறினார்.
வெங்கடேஸ்வரலு விசாரணையின்போது அளித்த தகவல்களின் அடிப்படையில் சீனிவாசராவ்,சுஜாதா ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ஜவகர்லால் நேரு டெக்னிகல் என்ற பெயரில் ஆந்திரா முழுவதும் 117 கிளைகளை துவக்கி அவற்றின் மூலம் நேரடியாக கல்லூரிகளில் படிக்கும் படிப்புகள் தவிர சமையல் கலை, வீட்டு நிர்வாகம், வியாபார நிர்வாகம் ஆகியவை போன்ற படிப்புகளுக்கான போலி சர்டிபிகேட்டுகளை 2000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்டு பதினோரு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பேருக்கு அவர்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

முறையான அனுமதி இல்லாமல் தன்னார்வ தொண்டு நிறுவனம் என்ற பெயரில் கல்வி நிறுவனம் போன்ற நிறுவனம் ஒன்றை துவக்கி ஆயிரக்கணக்கான போலி சட்டிபிக்கெட்டுகளை கட்டுக்கட்டாக அச்சடித்து அவற்றுக்கு தேவைக்கு ஏற்ற வகையில் விலை நிர்ணயம் செய்து கத்தை கத்தையாக பணம் சம்பாதித்த சீனிவாசராவ், சுஜாதா தம்பதி உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலி சர்டிபிகேட் தயார் செய்ய பயன்படுத்திய கம்ப்யூட்டர்கள், ஹார்டு டிஸ்க், ரப்பர் ஸ்டாம்புகள், போலி சர்டிபிகேட்டுகள் ஆகியவற்றை கைப்பற்றி பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனர்.

Views: - 0

0

0