பண மோசடி வழக்கு: அனில் தேஷ்முக் மீது அமலாக்க துறை வழக்கு

11 May 2021, 10:34 pm
Quick Share

மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மீது அமலாக்க துறையினர் பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மஹாராஷ்டிராவில் ஆட்சியில் உள்ள சிவசேனா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்., மூத்த தலைவர் அனில் தேஷ்முக், அம்மாநில உள்துறை அமைச்சராக இருந்தார். மும்பையில் உள்ள மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களில் இருந்து மாதந்தோறும், 100 கோடி ரூபாய் வசூல் செய்து தரும்படி போலீசாரிடம் அவர் கூறியதாக, முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் குற்றம் சாட்டினார். இதையடுத்து அனில் தேஷ்முக் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர் மீது அமலாக்க துறை அதிகாரிகள் பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Views: - 74

0

0