சிவசேனா எம்எல்ஏவுக்கு தொடர்புடைய இடங்களில் ரெய்டு..! பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி..!

24 November 2020, 1:18 pm
Pratap_shiv_sena_UpdateNews360
Quick Share

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தானே மற்றும் மும்பையில் உள்ள பிரதாப் சர்நாயக்குடன் தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறை தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

மகாராஷ்டிராவின் ஓவலா-மைஜ்வாடா சட்டமன்றத் தொகுதியிலிருட்னது கடந்த 2019 தேர்தலில் வெற்றிபெற்று எம்எல்ஏவாக இருப்பவர் சிவசேனாவின் பிரதாப் சர்நாயக். இவர் மீது பணமோசடி உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இதில் பணமோசடி குறித்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை இன்று அவர் தொடர்புடைய இடங்களில் தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது.

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ) கீழ் தானே மற்றும் மும்பையில் உள்ள சர்நாயக்கத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 10 இடங்களில் அமலாக்கத்துறை தேடல்களை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

“பாதுகாப்பு பணியாளர்களை வழங்கும் டாப்ஸ் நிறுவனத்தில் உள்ள ப்ரோமோட்டர்கள் மற்றும் சில அரசியல்வாதிகள் உட்பட தொடர்புடைய நபர்களுக்குச் சொந்தமான இடங்களில் தேடல்கள் நடத்தப்படுகின்றன” என்று ஒரு அதிகாரப்பூர்வ வட்டாரம் தெரிவித்துள்ளது.

பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், சிவசேனா தரப்பில், இது மத்திய அரசின் அரசியல் ரீதியிலான பழிவாங்கும் நடவடிக்கை என விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Views: - 22

0

0

1 thought on “சிவசேனா எம்எல்ஏவுக்கு தொடர்புடைய இடங்களில் ரெய்டு..! பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி..!

Comments are closed.