பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவு : முதலமைச்சர் பதவியில் இருந்து இன்று எடியூரப்பா விலகல்?

Author: Udayachandran
26 July 2021, 10:23 am
Yeduyurappa - Updatenews360
Quick Share

கர்நாடகா : முதலமைச்சராக பதவியேற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ளதால் எடியூரப்பா இன்று பதவி விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு, ஜூலை 26-ம் தேதி, கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பொறுப்பேற்றார். இந்நிலையில், கர்நாடகா முதல்வராக உள்ள எடியூரப்பா பதவி விலக உள்ளதாக சமீப நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன.

ஆனால் கட்சி மேலிடம் கூறினால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று கூறி வந்த எடியூரப்பா, வரும் 25-ம் தேதிக்கு பிறகு பாஜக தலைமையின் வழிகாட்டுதல் படி செயல்படுவேன் என்று தெரிவித்திருந்தார்.

பாஜக பொறுத்தவரை 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு கட்டாய ஒய்வு அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 78 வயதை எட்டியுள்ள எடியூரப்பா 2 ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், எடியூரப்பா அவர்கள், கர்நாடகா முதல்வராக பதவியேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, இன்று அவர் பதவி விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Views: - 165

0

0