ரயில் தண்டவாளத்தில் நூலிழையில் உயிர் தப்பிய முதியவர் : காவலருக்கு குவியும் பாராட்டு! (வீடியோ)

Author: Udayachandran
2 January 2021, 5:18 pm
Train Escape -Updatenews360
Quick Share

தண்டவாளத்தில் இறங்கிய பயணி, ரயில் வரும் போது நடைமேடையில் ஏற முயற்சி செய்த போது காவலர் கைகொடுத்து காப்பாற்றிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தகிசார் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை 60வயது முதியவர் ஒருவர் கடக்க முயன்றார். அப்போது தண்டவாளத்தில் காலணிகள் மாட்டிக் கொண்டது.

பின்னர் அந்த காலணியை மீண்டும் எடுத்து மாட்டிக் கொண்டு வருவதற்குள் அவவ்ழியாக ரயில் வந்ததை பார்த்து பதறினார். மீண்டும் நடைமேடையை நோக்கி உயிரை காப்பாற்றிக் கொள்ள சென்றார்.

ரயில் வந்ததை பார்த்த அங்கிருந்த காவலர் ஒருவர், கண்ணிமைக்கும் நேரத்தில் விரைவாக சென்று அந்த முதியவருக்கு கைகொடுத்து கரையேற்றினார்.

முதியவரின் முட்டாள்தனத்தால் இந்த விபத்து நடக்க நேரிட்டது. இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. தற்போது இந்த காட்சிகள் வலைதளத்தில் வெளியாக வைரலாகி வருகிறது.

Views: - 61

0

0