இஎம்ஐ வசூலிப்பதில் தளர்வு அறிவித்து விட்டு வட்டிக்கு வட்டி வசூலிப்பதா..? உச்சநீதிமன்றம் காட்டம்..!

26 August 2020, 12:07 pm
Quick Share

கொரோனா பேரிடரில் இஎம்ஐ வசூலிப்பதில் தளர்வு அறிவித்து விட்டு, வட்டிக்கு மேல் வட்டி வசூலிப்பது சரியா என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நாடு மழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், நட்டின் பொருளாதாரம் வெகு மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில் ஏரளமானோர் வேலை இழந்தும், பணிக்கு செல்ல வழியின்றியும் தவித்து வருகின்றனர்.

இது மட்டும் இன்றி ஏராளமான தனியார் நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்களின் சம்பளம் 20 சதவீதத்திற்கும் மேல் பிடித்தம் செய்யப்படுவதாக புகார்களும் எழுந்து வருகிறது.

இந்த இக்கட்டான நிலையில் ஏழை மக்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வரும் அவர்கள், இஎம்ஐ மூலமாகவே தங்கள் தேவைகளை நிவர்த்தி செய்கின்றனர்.

இந்தநிலையில், கொரோனா பேரிடர் காலத்தில் இஎம்ஐ கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் வட்டிக்கு மேல் வட்டி வசூலிப்பதாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, கொரோனா பேரிடரில் இஎம்ஐ வசூலிப்பதில் தளர்வு அறிவித்து விட்டு, வட்டிக்கு மேல் வட்டி வசூலிப்பது சரியா என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

வங்கிகளின் இத்தகைய செயல்பாட்டால் பொதுமக்கள் மேலும் அவதிக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் இது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Views: - 35

0

0