மாற்றுக் கருத்துள்ளவர்களை தாக்குவது சிவசேனாவின் இயல்பு தான்..? சர்சையைக் கிளப்பிய சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்..!

13 September 2020, 3:06 pm
sanjay_raut_madan_sharma_updatenews360
Quick Share

ஓய்வுபெற்ற இந்திய கடற்படை அதிகாரி மீது ஆறு சிவசேனா தொண்டர்கள் நடத்திய தாக்குதலை நியாயப்படுத்துவதன் மூலம் சிவசேனா ஒரு புதிய தாழ்வு நிலையை அடைந்துள்ளது.

இது முதலமைச்சர் உத்தவ் தாக்கரே குறித்து ஒரு கேவலமான கார்ட்டூனைப் பகிர்ந்து கொண்டதை அடுத்து நடந்த தன்னிச்சையான மற்றும் கோபமான எதிர்வினை என்று சிவசேனா வர்ணித்துள்ளது.

இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்ட சிவசேனாவின் தலைமை செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத், “மகாராஷ்டிராவில் சட்ட விதி உள்ளது. சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளும் எவரும் காப்பாற்றப்பட மாட்டார்கள். இது உத்தவ் தாக்கரேவின் கொள்கை.” எனத்  தெரிவித்தார்.

இத்தோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. ஆனால் அவர் அடுத்து, கடற்படை வீரர் மீதான தாக்குதல் குறித்து பேசிய ராவத், “மதன் சர்மா முதல்வர் குறித்து கேவலமான கார்ட்டூனை பரப்பினார். இது சிவசேனாக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.” எனத் தெரிவித்தார்.

மேலும் இதற்காக பாஜகவைத் தாக்கிய ராவத், பாஜகவின் எதிர்வினையை துரதிர்ஷ்டவசமானது என்றும் பிரச்சினையை அரசியலாக்குகிறது என்றும் கூறினார்.

பிரதமர், ஜனாதிபதி, ஆளுநர் அல்லது ஒரு முதலமைச்சர் போன்ற அரசியலமைப்பு பதவிகளில் உள்ளவர்கள் மீது தேவையற்ற, தீவிர விமர்சனங்களுக்கு ஒரு வெளிப்பாடாக கருத்து சுதந்திரம் பயன்படுத்தப்படும்போது மக்களின் கட்டுப்பாடு திணறடிக்கப்படுவதாக ராவத் தனது அறிக்கையை முடித்தார்.

குற்றத்தில் ஈடுபட்டவர்களை கண்டித்து கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்காவிட்டாலும் கூட, அவர்களுக்கு ஆதரவாக பேசாமளாவது இருந்திருக்கலாம். ஆனால் சஞ்சய் ராவத் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக கருத்துக் கூறியிருப்பது, சிவசேனா குண்டர்களின் கூடாரமாக மாறி வருகிறதா என மஹாராஷ்டிர மக்களிடையே கேள்வியெழுப்பியுள்ளது.

Views: - 5

0

0