நொய்யார் வனவியல் பூங்காவில் இருந்து தப்பி சென்ற புலி: மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது…!

2 November 2020, 1:37 pm
tiger - updatenews360
Quick Share

கேரள மாநிலம் நொய்யார் வனவியல் பூங்காவில் பிடிபட்ட நிலையில் தப்பிச் சென்ற புலி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்ட எல்லையை ஒட்டிய சியம்பம், அம்பத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகளை கொன்று, பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலியை கடந்த 26ம் தேதி வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.

இதனையடுத்து, பிடிபட்ட புலி திருவனந்தபுரம் நொய்யார் வனவியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, கூண்டின் கம்பிகளை கடித்து வளைத்து தப்பியோடியது.

இதனையடுத்து, கேரள வனத்துறையினர் தனிப்படை அமைத்து அப்பகுதி முழுவதும் தேடிய நிலையில், புதர் ஒன்றுக்குள் மறைந்திருந்ததை கண்டறிந்து மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

Views: - 15

0

0