சுஷாந்த் சிங் ராஜ்புத் கொலை..! இது அனைவருக்கும் தெரியும்..! பீகார் அமைச்சர் ஷாக்..!

18 August 2020, 6:50 pm
rhea_sushant_UpdateNews360
Quick Share

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கொலை செய்யப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும் என்று பீகார் அமைச்சர் மகேஸ்வர் ஹசாரி இன்று தெரிவித்தார்.

இந்த வழக்கில் யார் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் யாரும் உண்மையை மக்கள் முன் கொண்டு வர விரும்பவில்லை என்று ஹசாரி மேலும் கூறினார்.

விசாரணையில் ஒத்துழைத்து குற்றவாளியை தண்டிக்க வேண்டும் என்றும் அமைச்சர் மகாராஷ்டிரா அரசிடம் வேண்டுகோள் விடுத்தார்.

“சுஷாந்த் கொலை செய்யப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த கொலைக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும். இந்த விசாரணையில் மகாராஷ்டிரா அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் வழக்கில் தொடர்புடையவர்களை அம்பலப்படுத்தி தண்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் அரசியல் செய்யவில்லை.” என்று அவர் கூறினார்.

34 வயதான நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜூன் 14 அன்று, மும்பையில் பாந்த்ராவில் உள்ள தனது குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தையால் பீகார் போலீசில் புகாரளிக்கப்பட்டது. இந்நிலையில் மகாராஷ்டிரா போலீசார் பீகார் போலீசாருடன் ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சாட்டிய பீகார் அரசு ராஜ்புத்தின் மரணம் தொடர்பாக மும்பையில் இதுவரை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

ராஜ்புத்தின் பிரேத பரிசோதனை அறிக்கை பீகார் போலீசாருக்கு மகாராஷ்டிரா போலீசாரால் வழங்கப்படவில்லை என்றும் அது குற்றம் சாட்டியிருந்தது.

இந்நிலையில் பீகார் அரசாங்கத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு, சுஷாந்த் சிங்கின் தற்கொலை வழக்கு தொடர்பான விசாரணையை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) எடுத்துள்ளது.

ராஜ்புத்தின் காதலி ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீதுஇந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

ஆகஸ்ட் 5’ம் தேதி, திறமையான கலைஞரின் துரதிர்ஷ்டவசமான மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மை வெளிவர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Views: - 8

0

0