சிபிஐ முன்னாள் இயக்குனர் அஸ்வினி குமார் திடீர் தற்கொலை..!

Author: Sekar
7 October 2020, 10:35 pm
Former_CBI_director_Ashwani_Kumar_UpdateNews360
Quick Share

அதிர்ச்சியூட்டும் வகையில், மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) முன்னாள் இயக்குநரும், முன்னாள் நாகாலாந்து ஆளுநருமான அஸ்வினி குமார் இன்று சிம்லாவில் தற்கொலை செய்து கொண்டதாக சிம்லா காவல் கண்காணிப்பாளர் மோஹித் சாவ்லா உறுதிப்படுத்தினார்.

அஸ்வினி குமாரின் உடல் அவரது வீட்டில் தொங்கிய நிலையில் காணப்பட்டது.

அஸ்வினி குமார் 37 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசு மற்றும் இமாச்சல பிரதேச அரசு ஆகிய இரண்டிலும் உயர் பதவிகளை வகித்தார்.

அவர் 1973’ஆம் ஆண்டில் இந்திய போலீஸ் சேவையில் சேர்ந்தார். ஆகஸ்ட் 2006’இல் இமாச்சலப் பிரதேச டிஜிபி பதவியை ஏற்றுக்கொண்டார், அவர் ஜூலை 2008 வரை அந்த பதவியை வகித்தார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவருக்கு சிபிஐ இயக்குநரின் உயர் பதவி வழங்கப்பட்டது. மேலும் ஆகஸ்ட் 2, 2008 முதல் நவம்பர் 30, 2010 வரை அப்பதவியில் இருந்தார்.

பின்னர் அஸ்வினி குமார் மார்ச் 21, 2013 அன்று நாகாலாந்தின் 17’ஆவது ஆளுநராகவும், ஜூலை 29, 2013 அன்று மணிப்பூர் ஆளுநராகவும் பொறுப்பேற்றார். உயரடுக்கு சிறப்பு பாதுகாப்பு குழுவில் உயர் பதவிகளையும் வகித்தார். மேலும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பாதுகாப்புப் பிரிவின் ஒரு பகுதியாகவும் இருந்தார்.

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிர்மோர் என்ற ஒரு சிறிய மலை நகரத்தைச் சேர்ந்த இவர். இமாச்சலப் பிரதேச பல்கலைக்கழகத்தில் கல்வித் தகுதியை முடித்தார். அஸ்வினி குமார், ஆளுநராக இருந்த காலத்திற்குப் பிறகு, ஏ.பி. கோயல் பல்கலைக்கழகத்தில் வேந்தராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் அவருடைய திடீர் தற்கொலைக்கு காரணம் என்ன என்று எந்தவிதமான தகவலும் வெளியாகவில்லை.

Views: - 52

0

0