நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு ..! முன்னாள் மத்திய அமைச்சர் குற்றவாளி எனத் தீர்ப்பு..! சிபிஐ நீதிமன்றம் அதிரடி..!

Author: Sekar
6 October 2020, 1:10 pm
Coal_Scam_Dilip_Ray_UpdateNews360
Quick Share

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் வாஜ்பாய் ஆட்சியில் அமைச்சராக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ரேயை குற்றவாளி என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

ரூஸ் அவென்யூவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி பாரத் பரஷர், அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தின் போது நிலக்கரித்துறை அமைச்சராக இருந்த ரே, 1999’ஆம் ஆண்டு ஜார்க்கண்டில் பிரம்மதிஹ நிலக்கரி சுரங்கத்தை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடுகள் தொடர்பான வழக்கில் கிரிமினல் சதித்திட்டத்தில் குற்றவாளி எனக் கண்டறிந்தார்.

ரே தவிர, நிலக்கரி அமைச்சகத்தின் இரண்டு முன்னாள் மூத்த அதிகாரிகளான பிரதீப் குமார் பானர்ஜி, அப்போதைய கூடுதல் செயலாளர் நித்ய நந்த் கௌதம், காஸ்ட்ரான் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனம், அதன் இயக்குனர் மகேந்திர குமார் அகர்வல்லா மற்றும் காஸ்ட்ரான் மைனிங் லிமிடெட் நிறுவனம் குற்றம் புரிந்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை குறித்த விபரங்கள் அக்டோபர் 14’ஆம் தேதி நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 77

0

0