பணமோசடி வழக்கில் திரிணாமுல் கட்சியின் முன்னாள் எம்பி கைது..! அமலாக்கத்துறை அதிரடி..!

13 January 2021, 6:07 pm
Ex_TMC_MP_KD_Singh_UpdateNews360
Quick Share

பணமோசடி வழக்கில் முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கே.டி.சிங்கை அமலாக்க இயக்குநரகம் இன்று கைது செய்துள்ளது.

“பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பணமோசடி விசாரணை தொடர்பாக சிங்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது” என்று அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்படுவார் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிங் கட்சி விவகாரங்களில் சமீப காலங்களில் ஈடுபடவில்லை என்று கூறப்படுகிறது.

இரண்டு பணமோசடி வழக்குகள் தொடர்பாக சிங் மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் ஆகியோரின் வளாகங்களில் அமலாக்கத்துறை 2019 செப்டம்பரில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக ஜூன் 2019’இல், சிங்குடன் தொடர்புடைய ஒரு நிறுவனத்திற்கு சொந்தமான 239 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை கைப்பற்றியது.

சிங் அல்கெமிஸ்ட் குழுவின் தலைவராக இருந்துள்ளார். அவர் 2012’இல் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இரண்டு பணமோசடி வழக்குகளின் ஒரு பகுதியாக அமலாக்கத்துறை அவரை விசாரித்து வருகிறது.

Leave a Reply