பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் அமைச்சர் : போக்சோவில் வழக்குப்பதிவு… அவமானம் தாங்க முடியாமல் எடுத்த விபரீத முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
28 May 2022, 7:05 pm
Rajenra Bhaguguna - Updatenews360
Quick Share

உத்தரகாண்ட் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பகுகுணா தனது பேத்திக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தனது மருமகளால் குற்றம் சாட்டப்பட்டார்.

அவரது மருமகளே அவர் மீது புகார் தொடுத்தார். இதையடுத்து ராஜேந்திர பகுகுணா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, தனது மாமியாருடன் நடந்து சென்றபோது தன்னை துஷ்பிரயோகம் செய்ததாகவும், மிரட்டியதாகவும், தாக்கியதாகவும் அண்டை வீட்டாரான சவீதாவின் புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பகுகுணா தனது வீட்டின் மாடியில் தண்ணீர் தொட்டியின் மீது ஏறி துப்பாக்கியால் நெஞ்சில் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து,முன்னாள் அமைச்சரின் தற்கொலையை தொடர்ந்து அவரது மருமகள் மீது போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Views: - 488

0

0