சுஷாந்த் சிங் வழக்கில் மோடி தலையிட வேண்டும்..! பிரதமருக்கு கடிதம் எழுதிய சுஷாந்த் சிங்கின் சகோதரி..!

1 August 2020, 1:50 pm
sushant_updatenews360
Quick Share

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி, பிரதமர் நரேந்திர மோடியை முழு வழக்கையும் விசாரிக்க வலியுறுத்தி அவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தனது மறைந்த சகோதரருக்கு நீதி கோரி, ஸ்வேதா தனது சமூக ஊடக கணக்கில் நிறைய பதிவுகளை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

இன்று முன்னதாக, ஸ்வேதா பிரதமர் மோடியைக் குறிக்கும் குறிப்பை வெளியிட்டார். அதில் “அன்புள்ள ஐயா, என் இதயம் நீங்கள் உண்மையுடன் நிற்கிறீர்கள் என்று கூறுகிறது. நாங்கள் மிகவும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பாலிவுட்டில் இருந்தபோது என் சகோதரருக்கு எந்த பின்புலமும் இல்லை. இந்த வழக்கை உடனடியாக ஆராய்ந்து, எல்லாவற்றையும் சரியான வழியில் கையாளப்படுவதை உறுதிசெய்து கொள்ளுங்கள். நீதி மேலோங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

“நான் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சகோதரி, முழு வழக்கையும் அவசரமாக ஆராயுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவின் நீதித்துறை முறையை நாங்கள் நம்புகிறோம். எப்படியும் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.” என மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜூன் 14 அன்று அவரது மும்பை இல்லத்தில் இறந்து கிடந்தார்.

இதற்கிடையே இந்த வலக்கை விசாரித்து வரும் மகாராஷ்டிரா போலீசார், திரைப்பட தயாரிப்பாளர் மகேஷ் பட், திரைப்பட விமர்சகர் ராஜீவ் மசந்த், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருமான சஞ்சய் லீலா பன்சாலி, திரைப்படத் தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா உள்ளிட்ட 41 பேரின் அறிக்கைகள் இதுவரை விசாரணையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Views: - 0

0

0