சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு…!!!

Author: kavin kumar
28 September 2021, 8:06 pm
Air India Flight- Updatenews360
Quick Share

சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடையை வரும் அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி முதல் சர்வதேச போக்குவரத்தை மத்திய அரசு நிறுத்தியது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில், வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் நபர்களை மீட்கும் நடவடிக்கையாக, வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்து வரும் வந்தே பாரத் மிஷன் நடவடிக்கையை இந்தியா செயல்படுத்தியது.இதையடுத்து, கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகரிக்கத் தொடங்கியதால், சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடையை மத்திய அரசு நீட்டித்துக் கொண்டே வந்தது.

அதே சமயம், சில குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடையை வரும் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்து உள்ளது. உலக அளவில் கொரோனா தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால், சர்வதேச பயணிகள் விமான சேவைகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை நீட்டிக்கப்படுவதாக விமானப் போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது.இருப்பினும், சரக்கு விமானப் போக்குவரத்துக்கு எந்தத் தடையுமில்லை. ‘ஏா் பபுள்’ விதிகளின் அடிப்படையில் விமானங்கள் தொடா்ந்து இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Views: - 244

0

0