பௌர்ணமியை முன்னிட்டு கருட வாகனத்தில் காட்சி தந்த ஏழுமலையான் : திருப்பதியில் ஒலித்த கோவிந்தா கோஷம்!!
28 January 2021, 8:41 pmஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தை மாத பெளர்ணமியான இன்று தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தை மாத பௌர்ணமியான இன்று இரவு மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் உலா வந்தார். கோயிலில் எதிரே உள்ள வாகன மண்டபத்தில் இருந்து மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் வலம் வந்தார்.
பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துக்கு மத்தியில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். இதில் ஜீயர்கள் மற்றும் அர்ச்சகர்கள் தேவஸ்தான அதிகாரிகள் பங்கேற்றனர். 108 வைணவத் திருத்தலங்களில் கருடசேவை முக்கியமான வாகன சேவையாகும்.
அதேபோன்று ஏழுமலையான் கோவிலில் கருடசேவை மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாடவீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நான்கு மாட வீதிகளில் திரண்டு வந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
0
0