பேஸ்புக் பதிவால் கலவரம்..! பெங்களூருவில் போலீசார் துப்பாக்கிச்சூடு, 2 பேர் பலி…!

12 August 2020, 9:27 am
Quick Share

பெங்களூரு: கர்நாடகாவில் காங். எம்எல்ஏ உறவினர் வெளியிட்ட பேஸ்புக் பதிவு வன்முறையில் முடிய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகி உள்ளனர்.

புலிகேசி நகர் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் அகண்ட சீனிவாச மூர்த்தி. அவரது உறவினர் பெயர் நவின். இவர் தமது பேஸ்புக் பக்கத்தில் இஸ்லாம் பற்றிய பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அவரது இந்த பதிவு வைரலானது. சமூக நல்லிணக்கத்துக்கு கேடு விளைவிக்கும் பதிவு என விமர்சனங்கள் எழுந்தன. அவரது இந்த பதிவை கண்டு பொங்கிய மக்கள்  எம்எல்ஏ அகண்ட மூர்த்தி வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் குதித்தனர்.

அப்போது திடீரென வன்முறை வெடித்தது. நவீனை கைது செய்ய கோரி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எம்எல்ஏ வீடு மீது கற்களை வீசினர். அங்கிருந்த வாகனங்களையும் தீ வைத்தனர்.

விரைந்து வந்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி,  தடியடியும் நடத்தினர். ஆனாலும், வன்முறை கட்டுக்குள் வராமல் போக, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 

பின்னர் சர்ச்சைக்குரிய கருத்து பதிவு வெளியிட்ட காங்கிரஸ் எம்எல்ஏ உறவினர் நவின் கைது செய்யப்பட்டதாக பெங்களூரு போலீசார் அறிவித்தனர். ஆனாலும்,  வன்முறை காரணமாக பெங்களூருவின் டிஜே ஹல்லி, கேஜி ஹல்லி உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Views: - 0 View

0

0