விசாரணைக்கு அழைத்த டெல்லி அரசு..! தட்டிக் கழித்த பேஸ்புக்..! அதிருப்தியில் ஆம் ஆத்மி..!

15 September 2020, 6:51 pm
raghav_chadha_updatenews360
Quick Share

டெல்லி எம்.எல்.ஏ மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் ராகவ் சதா, சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் டெல்லி சிஏஏ கலவரத்தில் அதன் பங்கு தொடர்பாக முக்கியமான உண்மைகளை மறைக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.

‘பேஸ்புக் போன்ற இடைத்தரகர்களின் கட்டுப்பாடு இந்திய அரசாங்கத்தின் பிரத்தியேக அதிகாரத்திற்கு உட்பட்டது’ என்று கூறி, அதன் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரிக்கு வழங்கிய சம்மனை வாபஸ் பெறுமாறு அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான டெல்லி சட்டமன்றக் குழுவை பேஸ்புக் கேட்டதைத் தொடர்ந்து சதாவின் வலுவான கருத்துக்கள் வந்துள்ளன.

முன்னதாக, சதா தலைமையிலான டெல்லி சட்டமன்ற குழு, பேஸ்புக் இந்தியா துணைத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான அஜித் மோகனுக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியது.

சம்மனுக்கு பேஸ்புக் அளித்த பதிலுக்கு பதிலளித்த சதா, டெல்லி கலவரத்தில் சமூக ஊடக நிறுவனங்களின் பங்கு குறித்து பேஸ்புக் இந்தியாவின் அஜித் மோகன்,  குழு முன் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக கூறினார். சமூக ஊடகங்கள் இந்த அறிவிப்பை கடைபிடிக்க மறுப்பது குழுவின் நடவடிக்கையை புறக்கணிப்பதாக சதா கூறினார்.

குழு முன் பேஸ்புக் ஆஜராக மறுப்பது டெல்லி கலவரத்தில் அதன் பங்கு தொடர்பாக முக்கியமான உண்மைகளை மறைக்கும் முயற்சியாகும். இயற்கை நீதிக்கான கொள்கைகளுக்கு ஏற்ப புதிய சம்மன் வழங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0