ஐதராபாத்தில் பிரபல மருத்துவரின் பெயரில் போலி மருத்துவர் : இருமாநிலங்களில் சிகிச்சை அளித்தது அம்பலம்!!

8 February 2021, 5:32 pm
Hyderabad Fake Doctor- Updatenews360
Quick Share

தெலுங்கானா : ஐதராபாத்தை சேர்ந்த பிரபல மருத்துவர் பெயரில் போலி ஆவணங்களை தயார் செய்து ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பிரபல மருத்துவமனையில் சிறுநீரக பிரிவு மருத்துவராக பணிபுரிந்து வரும் முப்பு கிரண்குமார் எனும் மருத்துவரின் சான்றிதழை போலியாக தயார் செய்து பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் முப்பு கிரண்குமார் தனது பெயர் மற்றும் சான்றிதழை போலியாக தயார் செய்து யாரே ஏமாற்றுவதாக போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரை வைத்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை செய்தபோது ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அல்லவரத்தை சேர்ந்த மங்கம் கிரண்குமார் என்பவன், மருத்துவர் முப்பு கிரண்குமாரின் மருத்துவ சான்றிதழ் மற்றும் பெயரை அவதூராக பயன்படுத்தி போலி சான்றிதழ் தயார் செய்துள்ளது தெரியவந்தது.

மேலும் சீகாகுளம் மாவட்டம் ராஜம், அமலாபுரம், பீமாவரம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதையடுத்து மங்கம் கிரண்குமாரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த போலி மருத்துவ சான்றிதழ்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Views: - 0

0

0