“பார்க்க பளபளனு இருந்துச்சு“ : பொறியாளரை பொறி வைத்து பிடித்த காவல்துறை.!!

1 July 2020, 2:16 pm
andhr aFake Ruppe -Updatenews360-Recovered
Quick Share

ஆந்திரா : கடற்படையில் கிடைத்த வேலையை விட்டுவிட்டு கள்ள நோட்டுகளை அச்சடித்து பொறியாளர் உட்பட ஆறு பேரை ஆந்திர போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் விஜய நகரத்தை சேர்ந்த இன்ஜினியர் ராமு. பொறியாளருக்கு படித்த ராமு கடந்த காலங்களில் சில நிறுவனங்களில் வேலை செய்து அதன்பின் கடற்படையில் வேலை செய்தார். அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ராமு கடற்படையில் கிடைத்த வேலையை விட்டுவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து கோழி பந்தயம், கிரிக்கெட் சூதாட்டம் ஆகியவற்றை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கோழி பந்தயத்தில் தனக்கு பரிச்சயமான மற்றொரு ராமு என்பவருடன் சேர்ந்து விஜய நகரத்தில் உள்ள 2 ஜெராக்ஸ் சென்டர்கள் மூலம் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டு வந்தார். இந்த நிலையில் விஜயநகரம் அருகிலுள்ள சவரவள்ளி சந்தையில் இன்ஜினியர் ராமு, அவருடைய நண்பரான மற்றொரு ராமு ஆகியோர் அவர்களுடைய நண்பர்களான ரமணா,குரி நாயுடு, சேகர், சுரேஷ் ஆகியோர் மூலம் நேற்று முன்தினம் 20 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து ஆடுகளை வாங்க முயன்றனர்.

அப்போது அவர்கள் கொடுத்த பணத்தின் மீது வியாபாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சந்தைக்கு விரைந்து சென்ற போலீசார் ஆறு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 31 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள், 60 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேராசை பெரு நஷ்டம் என்ற பழமொழிக்கு இந்த சம்பவம் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.

Leave a Reply